காரில் கடத்திய 146 கிலோ போதை பொருள் பறிமுதல்

கண்டாச்சிபுரம், ஜூலை 4: கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மழவந்தாங்கல் கிராம எல்லையில் விழுப்புரம் -திருவண்ணாமலை சாலையில் உள்ள சோதனை சாவடியில் கண்டாச்சிபுரம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள், குட்கா பொருட்கள் விற்பனைக்காக எடுத்து செல்வது தெரியவந்தது. தொடர்ந்து போதை பொருட்களையும், கடத்தி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதனை கடத்தி வந்த இரண்டு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்தில் அவர்கள் பெங்களூரு பெசன்குடி பகுதியை சேர்ந்த அப்துல் நபி மகன் ஷபிபுல்லா (38), ஆரிப் மகன் அசாப் (24) என்பது தெரிய வந்தது. மேலும் காரில் இருந்து கைப்பற்றப்பட்ட 4 மூட்டையில் 146 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், விமல் பாக்குகளின் மதிப்பு ரூ.2 லட்சம் என தெரிந்தது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மேலும் இதே சோதனை சாவடியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காரில் மருத்துவர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பணம் எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post காரில் கடத்திய 146 கிலோ போதை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: