குமரியில் மீண்டும் சாரல் மழை

நாகர்கோவில், ஜூலை 4: குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் கொளுத்திய நிலையில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்திருந்தது. நேற்று சிற்றார், குழித்துறை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை காணப்பட்டது. கொட்டாரத்தில் 4.2, சிற்றார்-1ல் 10.4, களியல் 4.2, குழித்துறை 6.2, பேச்சிப்பாறை 9.6, முள்ளங்கினாவிளை 2.8 மி.மீ மழை பெய்திருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.22 அடியாகும். அணைக்கு 398 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 252 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.46 அடியாகும். அணைக்கு 365 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 16.89 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 191 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 16.99 அடியாக நீர்மட்டம் இருந்தது. பொய்கையில் 15.7 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 47.08 அடியும் நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 3 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 23.1 அடியாகும்.

The post குமரியில் மீண்டும் சாரல் மழை appeared first on Dinakaran.

Related Stories: