150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்; குப்பம் தொகுதியில் சந்திரபாபு 8வது முறையாக வெற்றி பெறுவார்: தேர்தல் பிரசாரம் செய்த மனைவி புவனேஸ்வரி பேட்டி

திருமலை: ஆந்திர மாநிலத்தில் வரும் 13ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு போட்டியிடுகிறார். சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அவரது மனைவி புவனேஸ்வரி குப்பம் தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி, “சந்திரபாபுவை குப்பம் தொகுதி மக்கள் 7 முறை வெற்றி பெற வைத்துள்ளனர்.

இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்வோம் என கட்சி நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி 8வது முறையாக சந்திரபாபு சட்டப்பேரவைக்கு தேர்ந்ெதடுக்கப்பட்டு முதல்வராக பதவி ஏற்பார். மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி 150 இடங்களில் வெற்றி பெறும். 150 இடங்களுக்கு குறையாமல் இந்த கூட்டணி வெற்றி வாய்ப்பை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்; குப்பம் தொகுதியில் சந்திரபாபு 8வது முறையாக வெற்றி பெறுவார்: தேர்தல் பிரசாரம் செய்த மனைவி புவனேஸ்வரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: