விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(14ம் தேதி) துவங்குகிறது. விக்கிரவாண்டி வட்டாசியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 24ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. 26ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள். அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே திமுக தனது வேட்பாளரை அறிவித்தது. திமுக சார்பில் விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: