சிறுதானியங்கள் குறித்த பிரதமர் மோடியின் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை

புதுடெல்லி: சிறுதானியங்கள் குறித்து பிரதமர் மோடி இயற்றிய பாடல், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பரிந்துரையை ஏற்று 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்தது. இதைத் தொடர்ந்து சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்கிற பாடல் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இப்பாடலை மும்பையில் பிறந்த இந்திய அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான பாலு எனும் பால்குனி ஷா அவரது கணவர் கவுரவ் ஷாவுடன் இணைந்து உருவாக்கி உள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் பேசிய பால்குனி, ‘‘இப்பாடலை பிரதமர் மோடி என்னுடன் இணைந்து எழுதியுள்ளார்’’ என்றார்.

இப்பாடலில் பிரதமர் மோடி சிறுதானியங்கள் குறித்து பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான கிராமி விருதுக்கு பிரதமர் மோடி எழுதிய பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த உலகளாவிய இசை என்கிற பிரிவில் இப்பாடல் விருதுக்கு போட்டியிடுகிறது. உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post சிறுதானியங்கள் குறித்த பிரதமர் மோடியின் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: