சென்னை : அரசு டெண்டர்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், சீன உதிரி பாகங்கள், தொழில்நுட்பக் கருவிகளின் தட்டுப்பாட்டால் பல திட்டங்கள் முடங்கிக் கிடப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
