கேப்டன் பாபர் அதிரடி சதம் 2வது டி20யிலும் பாக். அபார வெற்றி: நியூசிலாந்து ஏமாற்றம்

லாகூர்: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், 38 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 2-0 என முன்னிலை பெற்றது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தலா 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. லாகூரில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 88 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி அதே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது..

டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் – கேப்டன் பாபர் ஆஸம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தது. ரிஸ்வான் 50 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர் விளாச… பகார் ஸமான் (0), சைம் அயூப் (0), இமத் வாசிம் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். பாக். அணி 105 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்த நிலையில், பாபர் – இப்திகார் அகமது இணைந்து அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர்.

பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. பாபர் 101 ரன் (58 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), இப்திகார் 33 ரன்னுடன் (19 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் மேட் ஹென்றி 2, நீஷம், ரச்சின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன் மட்டுமே எடுத்து, 38 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் லாதம் 19, சாத் போவெஸ் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

ஒரு முனையில் உறுதியுடன் போராடிய மார்க் சாப்மேன் 65 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிப்லி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாக். தரப்பில் ஹரிஸ் ராவுப் 4, வாசிம், ஸமான், ஷதாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பாபர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி லாகூரில் இன்று இரவு 9.30க்கு தொடங்குகிறது.

The post கேப்டன் பாபர் அதிரடி சதம் 2வது டி20யிலும் பாக். அபார வெற்றி: நியூசிலாந்து ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: