சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரசிகர்களின் பாதுகாப்புக்கு 55 கேமராக்கள் பொருத்தம்: தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பறக்கும் ரயில் சேவை

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைப்பெறவுள்ளது. இதையொட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள அனைத்து சாலை சந்திப்புகள் உட்பட பல்வேறு இடங்களில் கையடக்க அதிநவீன 10 கேமராக்களை சாலைகளில் பொருத்தி கண்காணிக்க உள்ளனர். அதில் போட்டியை காண வரும் ரசிகரிகளின் வாகனங்களின் எண் வீடியோவாக பதிவு செய்யப்பட உள்ளது. இந்த காட்சிகளை காவல் அதிகாரிகள் நேரடியாக தங்கள் செல்போன்களில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைதானம் அருகே இருள் சூழ்ந்து காணப்படும் இடங்களில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்பட முக்கிய சாலைகளில் புதிதாக 55 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிந்தாதிரிபேட்டை-வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், இரவு 10.40 மணிக்கு வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு 11.15 மணிக்கு சிந்தாதிரி பேட்டை வந்தடையும். மறுமார்க்கத்தில் இரவு 11.20 மணிக்கு சிந்தாதிரிபேட்டையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.5 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

The post சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரசிகர்களின் பாதுகாப்புக்கு 55 கேமராக்கள் பொருத்தம்: தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பறக்கும் ரயில் சேவை appeared first on Dinakaran.

Related Stories: