பாஜ கூட்டணிக்கு மாறும் எண்ணம் இல்லை: ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் திட்டவட்டம்

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கைகோர்த்து செல்வது சரியாக இருக்காது என்றும், அதனுடன் இணையும் எண்ணம் இல்லை என்றும் ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவர் ஜெய்ந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜெய்ந்த் சவுத்ரி பேட்டி ஒன்றில் கூறுகையில்,‘‘2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் எங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது குறித்த செய்திகள் வெறும் யூகங்கள் மட்டுமே.

பாஜவுடன் கைகோர்ப்பது சரியாக இருக்காது. இந்தியா கூட்டணியை முன்னோக்கி எடுத்து செல்வதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பங்கு உள்ளது. நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர். மும்பை கூட்டத்திற்கு பின் இந்தியா கூட்டணி குறித்த யூகங்கள் இருக்காது. இந்தியா கூட்டணி மீது மக்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்” என்றார்.

The post பாஜ கூட்டணிக்கு மாறும் எண்ணம் இல்லை: ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: