பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவைப்படும் பட்சத்தில் பாஜக 76 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. ஆளும் பிஜு ஜனதா தளம் 55 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதியிலும் முன்னேறி உள்ளன. இதன் மூலம் 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜேடி ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. 21 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசாவில் 19 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், பிஜேடி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே முதலிடம் வகிக்கின்றன. ஒடிசாவில் பாஜக வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் புவனேஷ்வரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
The post பிஜேடிக்கு விழுந்த பெரிய அடி.. ஒடிசாவில் சட்டமன்ற, மக்களவை தேர்தல்களில் வெற்றி கனியை ருசிக்கும் பாஜக!! appeared first on Dinakaran.