விக்கிரவாண்டி அருகே ரூ.1 கோடி பறிமுதல்: டாக்டர் காரில் சிக்கியது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல மாவட்ட எல்லைப் பகுதி மற்றும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் துணை ராணுவ பாதுகாப்புடன் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று விழுப்புரம் – திருவண்ணாமலை மாவட்ட எல்லையான மழவந்தாங்கள் பகுதி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது காரிலிருந்த 2 சூட்கேசில் ரூ.1 கோடி பணம் இருந்தது இருந்தது தெரியவந்தது. சாரணையில் காரில் வந்தவர், சென்னையைச் சேர்ந்த டாக்டர் மதனகோபால் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் ரூ.1 கோடிக்கான ஆவணங்கள் இல்லை. இதனால் ரூ.1 கோடி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து மதனகோபால் கூறுகையில், ‘எங்களுக்கு பூர்வீக சொத்து திருச்சியில் உள்ளது. அதனை விற்பனை செய்துவிட்டு என்னுடைய பங்கு ரூ.1 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு வந்தோம். சென்னைக்கு செல்லும் வழியில் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றோம். அப்போது கண்டாச்சிபுரம் பகுதியில் வழி தெரியாமல் திருக்கோவிலூர் சாலையில் சென்று திரும்பவும் வரும்போது வாகன சோதனையில் மடக்கி நிறுத்தினார்கள். சொத்து விற்பனை செய்தற்கான ஆவணங்களும், பணம் பெற்றதற்கான ஆவணங்களும் இருக்கின்றன. அதனை கொண்டு வந்து காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்வோம்’ என்றார்.

The post விக்கிரவாண்டி அருகே ரூ.1 கோடி பறிமுதல்: டாக்டர் காரில் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: