பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பெங்களூரு: பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாளை விரிவான ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்ட உள்ளது.

பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் நிலையில், அதற்கான கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பெங்களூரு சென்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கட்சிகள் ஆட்சி அமைத்த மாநிலங்களில், அந்த கட்சிகளின் ஆதரவு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.

மேலும் அந்த மாநிலங்களில் எதிர்கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்து, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி வருகிறது. அதனால் எதிர்கட்சிகள் அனைத்தும் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசின் பதவி காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதனால் 3வது முறையாக பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க எதிர்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில் பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. விரிவான ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்ட உள்ளது.

காங்கிரஸ் தலைவர் கார்கே வரவேற்பு உரையுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

The post பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: