சென்னை: பெங்களூரு நெரிசலில் சிக்கி 5 தமிழர்கள் உட்பட 11 பேர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என வருத்தம் தெரிவித்தார்.