பாகூர் திமுக எம்எல்ஏ செந்தில்குமார் பிறந்தநாள்; முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், தலைவர்கள் வாழ்த்து: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

 

பாகூர்: புதுச்சேரி மாநில திமுக பொருளாளரும், பாகூர் தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார் பிறந்த நாள் விழா பாகூாில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள பிரசித்தி பெற்ற மூலநாதர் வேதாம்பிகை கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் செந்தில்குமார் எம்எல்ஏ தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கிருந்து கிராமிய மற்றும் ஆன்மிக கலை குழுவினர் வரவேற்பு அளித்தனர். பிறகு செந்தில்குமார் எம்எல்ஏவை ஊர்வலமாக பாகூர் விஜயவர்த்தினி மகாலில் நிகழ்ச்சி அரங்கத்திற்கு ஆதரவாளர்களும், பொதுமக்களும் அழைத்து சென்றனர். அங்கு நடந்த விழாவில் பாகூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாலை மற்றும் பரிசு பொருட்களுடன் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து வாழ்த்தினர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில திமுக அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், லட்சுமிகாந்தன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார், திமுக அனைத்து அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு சைவ, அசைவ விருந்து வழங்கி உபசரித்த செந்தில்குமார் எம்எல்ஏ நன்றி தெரிவித்தார். முன்னதாக சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், பாஸ்கர் எம்எல்ஏ ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விழாவையொட்டி பாகூர் பேட்டிலுள்ள அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடையான டி சர்ட், சாட்ஸ் ஆகியவற்றை செந்தில்குமார் எம்எல்ஏ வழங்கினார். மேலும் செந்தில்குமார் எம்எல்ஏ ஏற்பாட்டின் பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலமாக, பாகூர் மற்றும் குருவிநத்தம் கிராமத்தில் 2 நாட்கள் அதிநவீன வசதியுடன் கூடிய சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஏராளமானோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

 

Related Stories: