தேர்வு முறைமையில் எழுத்துத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. குழு விவாதம், நேர்காணல் வாயிலாகத் தேர்வு நடைபெறும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் உள் பதவி உயர்வுகளுக்கே எழுத்துத் தேர்வுகள் உள்ள நிலையில் புதிய நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்ற முரண்பாடு வியப்பைத் தருகிறது.
இத்தகைய மாற்றம் தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய மாணவர்களுக்கு போட்டியில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும். மேலும் எழுத்துத் தேர்வை நீக்கி குழு விவாதம், நேர்காணல் மட்டுமான முறைமை வெளிப்படைத் தன்மை அற்றதாகவே அமையும். இது தனி நபர் விருப்பு வெறுப்புகள், வெளித் தலையீடுகளுக்கு வழி வகுப்பதுமாகும். ஆகவே புதிய முறைமையை கைவிட்டு, முன் அனுபவ நிபந்தனையை நீக்கி, எழுத்துத் தேர்வுடன் கூடிய முந்தைய நியமன முறைமைக்குத் திரும்ப தலையீடுகளை செய்யுமாறு கோரி மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம்: மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.