டெல்லி: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு ஏற்படுத்துகிறார். பா.ஜ.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவனஈர்ப்பு தீர்மானங்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படாமல் உள்ளது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் இவ்வாறு கூறினார்.
The post ஆளுநருக்கு எதிராக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.