கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்

தர்மபுரி: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தர்மபுரி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம், முன்னாள் மாநில பொது செயலாளர் கவிஞர் ரவீந்திரபாரதி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னக்கண்ணன், துணை செயலாளர் மணி, பொருளாளர் வீரபத்திரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜன், அசோகன், பெருமாள், வணங்காமுடி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை அதிகரிப்பு சட்ட மசோதாவை அரசு திரும்ப பெறவேண்டும். ஒன்றிய அரசு பாடச்சுமைகள் குறைப்பு என்ற பெயரில் உண்மையான வரலாறுகள் நீக்குவது கண்டனத்துக்குரியது. அரூரில் பாரதியார் சிலை நிறுவ வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக பொது கலை அரங்கு கூடத்தை அரூரில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post கலை இலக்கிய பெருமன்ற கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: