சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் அனுசரிப்பு

 

பாடாலூர், ஜூன் 26: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம்தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் முத்துசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், போதைப்பொருட்களினால் ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துக் கூறினார்.

மேலும் யோகா, உடற்பயிற்சி, புத்தகங்கள் வாசிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம், குடும்பத்துடன் அன்புச் சங்கிலி போன்றவை நாளைய தலைமுறையினர் மது, புகை, போதைப்பொருள் போன்ற தீய பாதைக்கு செல்லாமல் காக்க உதவும் என எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ரமேஷ், மருந்தாளுநர் பல்லவி, ஆய்வக உதவியாளர் புவனேஸ்வரி, செவிலியர்கள் திவ்யா, அருணா, அனிதா, பணியாளர் திலகவதி மற்றும் கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: