தீராத வயிற்று வலியால் விஷமருந்தி மூதாட்டி தற்கொலை

 

தா.பழூர், ஜூன் 26: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சந்திரபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மனைவி பழனியம்மாள் (68). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். தீவிர சிகிச்சை அளித்தும் குணமாகாததால் வீட்டில் யாரும் இல்லாதபோது பழனியம்மாள் விஷமருந்தி வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதனைக் கண்ட உறவினர்கள் பழனியம்மாளை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மான் உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தீராத வயிற்று வலியால் விஷமருந்தி மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: