அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.4 என விற்பனை

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.4க்கு விற்பனையாகிறது. முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோயிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகிறது. இப்பகுதி முருங்கை காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கேரளா மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காயிக்கு தனி மெளசு உள்ளது.ஆகையால் அரவக்குறிச்சி, மலைக்கோயிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்நிலையில் கடந்த மாதங்களில் முருங்கை மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. தற்போது இம்மாதம் இறுதியில் சீசனுக்காக அறுவடை செய்ய அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை தோட்டங்களில் அதிக அளவில் முருங்கைகாய் காய்த்து தொங்குகிறது.தற்போது விவசாயிகள் முருங்காய் அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று ஈசநத்தம் முருங்கை சந்தையில் கிலோ ரூ 4க்கு விற்பனையாகிறது.

சென்ற மாதங்களில் முருங்கை கிலோ ரூ 80 வரை இருந்தது. தற்போது நேற்று கிலோ ரூ.4 க்கு மேல் விற்பனையாகவில்லை. இதனால் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.4க்கு விற்பனையாகிறது. முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.

The post அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.4 என விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: