ஆந்திராவில் வாக்குச்சாவடிகளில் கடும் மோதல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைப்பு

ஆந்திரா: ஆந்திராவில் வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட கடும் மோதலால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டன. சித்தூர், கடப்பா உட்பட 4 மாவட்டங்களில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங். தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

சில இடங்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேச கட்சியினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சித்தூர் மாவட்டத்தில் ஓட்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன.

அதே போல் மேலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது. கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களிலும் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினருக்கும், சந்திரபாபு நாயுடு கட்சியினருக்கும் வாக்குவாதம் மற்றும் கார் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களும் ஏற்பட்டது. இதுபோன்ற மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மேலும் அதிகமான போலீசார் வாக்குப்பத்திவு நடைபெறும் இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் கேட்ட பொழுது மோதல் புகார்கள் குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேச கட்சி ஆகியவை ஆந்திராவில் பிரதான கட்சியாக இருந்துவரும் நிலையில் தொண்டர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிரது.

The post ஆந்திராவில் வாக்குச்சாவடிகளில் கடும் மோதல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: