ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

திருமலை: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் முதல்வராக இருந்தபோது, அக்கட்சியில் எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரகுராமகிருஷ்ணம் ராஜு, சில மாதங்களில் ஜெகன்மோகனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடான அணுகுமுறையால் விமர்சிக்க தொடங்கினார். அந்த நேரத்தில் அவரை பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் சிஐடி போலீசார் ரகுராமகிருஷ்ணம் ராஜுவை கைது செய்தனர். மேலும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரகுராமகிருஷ்ண ராஜு உண்டி தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தன்னை பொய் வழக்கில் கைது செய்து அடித்து துன்புறுத்தி கொல்ல முயற்சி செய்ததாக ரகுராமகிருஷ்ணம் ராஜு சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதையடுத்து முன்னாள் சிஐடி டிஜிபி சுனில் குமார் ஐ.பி.எஸ், உளவுத்துறை தலைவர் சீதாராமஞ்சநேயுலு ஐபிஎஸ், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, அப்போதைய சிஐடி கூடுதல் எஸ்.பி விஜய் பால் ஆகியோர் மீது கொலை செய்ய முயற்சி செய்ததாக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: