ரியாத்: இந்தியா, வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) முதல் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி தலைநகர் ரியாத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அவர் நேற்று, சவுதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத்தையும், கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜெஸ்ஸிம் அல் தானியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இரு தரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதவிர, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஜெர்சி லவரோவ்வையும் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகள் தொடர்ச்சியாக தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் கூறிய நிலையில் அந்நாட்டு அமைச்சரை ஜெய்சங்கர் சந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post சவுதி, கத்தார் அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு appeared first on Dinakaran.