அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணம் ஃபாரஸ்ட் கவுண்டியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக் கொண்டிருந்த ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றது. இதனால் அதில் பயணம் செய்த 8 பேர் சில மணி நேரங்கள் தலைகீழாக அந்தரத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரையிலிருந்து 100 அடி உயரத்திற்கு மேல் ரோலர் கோஸ்டர் நின்றதால், அதற்கேற்ப சாதனங்களை கொண்டுவந்து மீட்பு நடவடிக்கைகளை தொடங்க 2 மணி நேரங்கள் ஆகின. 3 நகரங்களை சேர்ந்த தீ அணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரோலர் கோஸ்டரில் சிக்கிக்கொண்ட அனைவரும் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
The post அமெரிக்காவில் அந்தரத்தில் திடீரென நின்ற ரோலர் கோஸ்டர்.. சிக்கிக்கொண்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.