அஜின்கியா ரஹானேவின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வரும் நிலையில், யஷஸ்வி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை இலக்காகக் கொண்டுள்ளார்.

2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 1,159 ரன்கள் எடுத்துள்ளார். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஏற்கனவே 1,028 ரன்கள் எடுத்த நிலையில், 22 வயதான இளம் வீரர் ஜெய்ஸ்வால், மூத்த வீரரான ரஹானேவின் சாதனையை முறியடிக்க இன்னும் 132 ரன்கள் தேவைப்படுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இந்த சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரஹானே மற்றும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஒரே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்று இந்திய வீரர்களில் யஷஸ்வியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​ஜெய்ஸ்வால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​ஸ்கோரிங் தரவரிசையில் இங்கிலாந்தின் பென் டக்கெட்டுடன் இரண்டாவது இடத்தில் 1,028 ரன்களுடன் இணைந்துள்ளார்.

2023 இல் ரோசோவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்டில் அறிமுகமான யஷஸ்வி, 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 68.53 சராசரியில் 1,028 ரன்கள் குவித்துள்ளார். அதில் மூன்று சதங்கள், நான்கு அரை சதங்கள் மற்றும் இரண்டு இரட்டை சதங்கள் அடங்கும்.

The post அஜின்கியா ரஹானேவின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: