வந்தவாசி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வளர்ச்சிப்பணிகள் ஆலோசனை கூட்டம் பிடிஓ தலைமையில் நடந்தது

வந்தவாசி, டிச.3: 36 ஊராட்சிகளில் நடக்கவிருக்கும் வளர்ச்சிப்பணிக்கான ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் பிடிஓ தலைமையில் நடந்தது.வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வந்தவாசி பிடிஓ அலுவலகத்தில் பிடிஓ ப.பரணிதரன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. பொறியாளர் ரவிமலரவன், துணை பிடிஓக்கள் மாணிக்கவரதன், சங்கர், வில்வபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் ஏற்கனவே 15 ஊராட்சிகளில் ₹2.85 கோடியில் வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றது. மேலும், 36 ஊராட்சிகளில் ₹3.37 ேகாடியில் இந்த வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்த உள்ளது.

அப்போது இந்த திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் எவ்வாறு செயல்படுத்த வேண்டும், எவ்வாறு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஏற்படுத்துதல், தனிநபர் வீடுகளுக்கு 1,301 குழாய் இணைப்புகள் வழங்குதல் போன்ற வளர்ச்சிப்பணிகள் குறித்து கிராம ஊராட்சிகள் பிடிஓ ச.பாரி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் பணியை விரைந்து முடிக்க அலுவலர்களும் விரைந்து பணியாற்ற வேண்டும் என கூறினர். முடிவில் துணை பிடிஓ மா.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Stories: