புயல், மழை மீட்பு பணிக்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

விருதுநகர், டிச. 2:  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, ‘மாவட்டத்தில் 9 இடங்கள் மட்டுமே வெள்ளம் பாதிக்க வாய்ப்புள்ள இடமாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு அதிகாரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கு பகுதியில் மழை அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு சம்பந்தப்பட்ட விஏஓக்களுடன் இணைந்து உடனே நிவாரண முகாம்களை துவங்கி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடையின்றி பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது வரை 30 முதல் 35 சதவீத கண்மாய்கள் மட்டுமே நிரம்பியு–்ளன. அதனால் இங்கு எவ்வளவு மழை பெய்தாலும் அது வரமே. மழைநீர் வீணாகாமல் சேமிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் 9 அணைகளில் 3 அணைகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதுவும் முழு கொள்ளளவை எட்டவில்லை. அதனால் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத வகையில் நீர்நிலைகள் நிரம்பும். வரும் கோடை காலத்தை சமாளிக்க இந்த நீராதாரம் பயன்படும். 50 நீச்சல் வீரர்களுடன் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையத்தில் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. படகுகள், பரிசல்கள் போன்ற உபகரணங்களும் தயாராக உள்ளன’ என்றார்.

Related Stories: