15 ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பக்தர்கள் மகிழ்ச்சி துரிஞ்சாபுரம் அருகே கமல புத்தூர் கிராமத்தில்

கலசபாக்கம், மே 4: துரிஞ்சாபுரம் அருகே கமல புத்தூர் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துரிஞ்சாபுரம் ஒன்றியம் கமல புத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. கிராமப்புறங்களில் பங்குனி மாத முதல் ஆவணி மாதம் வரை அக்கினி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அக்னி வசந்த விழா நடைபெறும் கிராமங்கள் மங்களகரமாக காட்சியளிக்கும் அக்னி வசந்த விழாவின்போது தெருக்கூத்து நாடகங்களும், மகாபாரத சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம். இதில் ஆர்வத்துடன் கிராம மக்கள் பங்கேற்பார்.

தற்போது பல்வேறு கிராமங்களில் அக்னி வசந்த விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று துரிஞ்சாபுரம் ஒன்றியம் கமல புத்தூர் கிராமத்தில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி வரும் 22ம் தேதி முதல் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் பகடை துயில் கிருஷ்ணர் தூது அரவான் மோகினி திருமணம் அர்ஜுனன் தவசு துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு மகாபாரத சொற்பொழிவுகளும் தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்ச்சியான அக்னி வசந்த விழா ஜூன் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் மாலை அக்னி வசந்த விழாவும் நடைபெற உள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வசந்த விழா நடைபெற உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post 15 ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பக்தர்கள் மகிழ்ச்சி துரிஞ்சாபுரம் அருகே கமல புத்தூர் கிராமத்தில் appeared first on Dinakaran.

Related Stories: