காரைக்காலில் அரசு பள்ளி, மீன் மார்க்கெட்டில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

காரைக்கால், டிச.1: காரைக்கால் அரசு பள்ளி மற்றும் மீன் மார்க்கெட்டில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கொரோனா விழிப்புணர்வு பிரச்சராத்தில் ஈடுபட்டனர். நிவர் புயலை முன்னிட்டு, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சுமார் 25 பேர், காரைக்கால் மாவட்டத்திற்கு வந்தனர். தொடர்ந்து, நிவர் புயலில் சாலையோரம் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மீனவ கிராமம் மற்றும் நகர் பகுதிகளில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, நேற்று காரைக்கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பேரிடர் மீட்பு செயல் விளக்கம் செய்துகாட்டினர். மேலும், காரைக்கால் காய்கறி, மீன் மார்க்கெட்டில் கொரோனா விழிப்புணர்வு பிரசராம் செய்தனர். அப்போது, 2ம் கட்ட கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், மக்கள் முககவசம், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றவேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவவேண்டும் என வலியுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் படையின் துணை கமாண்டன்ட் மோகனரங்கம் மற்றும் யோகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: