ஜெயங்கொண்டத்தில் சாலையோர புளிய மரத்தில் திடீர் தீ

ஜெயங்கொண்டம், மே5: ஜெயங்கொண்டம் சாலையோர புளியமரத்தில் திடீர் தீ ஏற்பட்டு புகையாக வெளியே வந்தது-இது அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்தால் புளியமரம் எரிந்ததா? என பொதுமக்கள் அச்சத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தீயணைப்பு துறையினர் புளியமரத்தில் ஏற்பட்ட தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பேராடி அணைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலையில் வேலாயுத நகர் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிர் புறம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் சாலை ஓரத்தில் உள்ளது. இந்த மரத்தின் உள்பகுதியில் இருந்து உச்சி வெயில் நேரத்தில் திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

மரத்தின் அருகே சென்று பார்த்த போது புளியமரத்தின் அடிப்பகுதியில் இருந்து மேல் பாதி தூரம் வரை உள்பகுதியில் குடைந்து மரித்து போன நிலையில் இருந்தது..இந்த மரத்தின் அடிப்பகுதியில் கிடந்த குப்பையின் மீது ரோட்டோரம் சென்றவர்கள் யாரேனும் புகைத்து விட்டு துண்டு சிகரெட் அல்லது பீடி நெருப்புடன் போட்டுச் சென்றார்களா? அல்லது எவரேனும் குப்பையை கொளுத்தி விட்டார்களா? வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து தானாக பற்றிக் கொண்டதா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில் தீயானது குப்பையில் பரவி மரத்தில் உள்பகுதியில் எரிந்து புகை, புகையாக வந்துள்ளது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்தால் மரம் எரிகிறது என்றும் . மரம் எரிந்தால் மரம் விழுந்து சாலையில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டு விடுமோ ? என்ற அச்சத்தில் தீயை அணைப்பதற்காக அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வரும் நீலமேகம் என்பவர் தனது வாட்டர் சர்வீஸ் பைப்பு மூலம் மரத்தின் உள்பகுதியில் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.

இருப்பினும் அது பயனளிக்கவில்லை இதையடுத்து நீலமேகம் ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த. ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரத்தின் உள்பகுதியில் இருந்து புகை வந்த வழியாக தண்ணீர் பீய்ச்சி அடித்து நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வந்த தீ புகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஜெயங்கொண்டத்தில் சாலையோர புளிய மரத்தில் திடீர் தீ appeared first on Dinakaran.

Related Stories: