மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும்

கரூர், மே 5: மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி வழியாக திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், வேடசந்தூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோடங்கிப்பட்டி அடுத்துள்ள பத்தாம்பட்டி பிரிவு வழியாக செல்கிறது.

இதே போல், திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கருர் போன்ற அனைத்து பகுதிகளுககு வரும் வாகனங்கள் அனைத்தும் பத்தாம்பட்டி வழியாக வந்து செல்கிறது. பத்தாம்பட்டி பகுதியில் நு£ற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில, பத்தாம்பட்டி பிரிவு அருகே பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

இவை கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடநதுள்ளதால் தற்போது அவற்றின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எநத நேரமும் விழும் நிலையில் உள்ள இதனை யாரும் தற்போது பயன்படுத்தாமல் இருந்தாலும், குடிமகன்களுக்கு தஞ்சம் அளிககும் வகையில் இவை உள்ளன.

எனவே, இந்த பகுதியின் வழியாக செல்லும் வாகனங்களில் ஏறிச் செல்லும் பத்தாம்பட்டி பகுதியினர் நலன் கருதி இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
துறை அதிகாரிகள் பார்வையிட்டு இதனை விரைந்து சீரமைத்து எளிதாக பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: