தீயணைப்பு துறையினர் அணைத்தனர் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் மழை வேண்டி பெரம்பலூரில் 2வது முறையாக இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை

பெரம்பலூர்,மே5: பெரம்பலூர் நகரில் உள்ள மதரஸா பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல், நூர் பள்ளிவாசல், மக்கா பள்ளி வாசல், அபு ஹனிபா பள்ளி வாசல் ஆகிய 5பள்ளி வாசல்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கடந்த ஏப்ரல் 27ம்தேதி பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மவுலானா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி மழைக்காக சிறப்புத் தொழுகை நடத்தினர்.

இந்நிலையில் 2வது முறையாக நேற்று அதே மவுலானா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடி மழைக்காக சிறப்புத் தொழுகை நடத்தினர். அங்கு தமிழகத்தில் வரலாறு காணாதபடி நிலவி வரும் கடும் வெப்பம் குறைய வேண்டும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரத்திற்கும், கடும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பூமி குளிர வேண்டும் என்பன உள்ளிட்டக் காரணங்களுக்காக நல்ல மழை வேண்டி சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர்.

இந்தத் தொழுகைக்கு பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களுக்கான ஜமா அத்துல் உலமா சபை தலைவர் முகமது முனீர் தலைமை வகித்தார்.டவுன் பள்ளிவாசல் பேஷ் இமாம் முகமது சல்மான் கலந்து கொண்டு துவா ஓதி மழைக்காக பிரார்த்தனை செய்தார். இந்த சிறப்பு கூட்டுத் தொழுகைக் கான ஏற்பாடுகளை ஆலம் பாடி மதரஸா பள்ளிவாசல் ஹஜ்ரத் இக்க்ஷானுல்லா செய்திருந்தார். கூட்டுத்தொழுகை யில் பெரம்பலூர் நகரில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கள் கலந்து கொண்டனர்.

The post தீயணைப்பு துறையினர் அணைத்தனர் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் மழை வேண்டி பெரம்பலூரில் 2வது முறையாக இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை appeared first on Dinakaran.

Related Stories: