அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு அரியவகை முயல் வளர்ப்பு பயிற்சி முகாம்

காரைக்கால், நவ.30: காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, வெளிநாட்டு அரியவகை முயல் வளர்ப்பு குறித்து, பயிற்சி முகாம் நடைபெற்றது. காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில், இளங்கலை வேளாண் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள், கிராமத் திட்டம் எனும் நேரடி களப்பயிற்சியினை, கல்லூரியின் இணைப்பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமையில், தாங்கள் வசிக்கும் கிராமங்களில் சேரில் சென்று செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் நல்லாத்தூர் உள்ள வெளிநாட்டு அரியவகை முயல் வளர்ப்பு பண்ணையில் நேற்று நேரடி கள பயிற்சியினை பெற்றனர். பண்ணையில், முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் டொனால்டு வில்பிரட் பேசினார். மாணவி மோனிஷா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இறுதியில், மாணவி ரச்சனா நன்றி கூறினார்.

Related Stories: