செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் குறுகிய கால பயிற்சி திட்டம்

திருச்செங்கோடு, நவ.30: திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையும் ஏஐசிடிஇயும் இணைந்து இரண்டாம் சுற்று செயற்கை  நுண்ணறிவு அடிப்படையிலான நாவல் மின் வினியோகம் மற்றும் திருத்தம் குறித்து 6 நாட்கள் ஆன்லைன் குறுகிய கால பயிற்சி திட்டம்  கூகுள் மீட் பயன்பாட்டில்  நடந்தது. கல்லூரியின் தாளாளரும், செயலாளருமான பேராசிரியர் பாலதண்டபாணி துவங்கி வைத்தார். செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் முதல்வர்   வெங்கடேஷ், முதன்மை நிர்வாக அதிகாரி  மதன்  மற்றும் வேலைவாய்ப்பு -பயிற்சி துறை இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர்  கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சோமசுந்தரம், வினய்குமார், வெங்கட கிருத்திகா, ரஞ்சித்  தங்கவேல் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் உமாதேவி  நன்றி  கூறினார்.

Related Stories: