பெரம்பலூர்,நவ.25:பெரம்ப லூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வெங்கடபிரியா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகனம் வாங்கு வதற்கு, தமிழக அரசின் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ரூ.25ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50சதவீத தொகை இரண்டில் எது குறைவோ அந்தத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31,250 வழங்கப்படும். 125சிசி-க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந் தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங் களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பயனாளிகள் 18 முதல் 45 வயது உள்ளவராகவும் விண்ணப்பிக்கும்போது இரு சக்கர வாகன ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பய னாளியின் ஆண்டு வருமா னம் ரூ.2.50லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.