கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை

பெரம்பலூர்,ஏப்.30: பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வெப்பத்தால் வரப்போகும் தண்ணீர்த் தட்டுப் பாட்டினை போக்க கல்குவாரி தண்ணீரைப் பயன்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி சாகுபடியையும் கிணற்று பாசனத்தையும் நம்பியுள்ள பூமியாகும். மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சைமலை தொடர்ச்சியில் இருந்து கல்லாறு, காட்டாறு,சுவேதாநதி, கோனேரி ஆறு, மருதையாறு என ஐந்து ஆறுகள் உற்பத்தியாகிச் சென்றாலும் அவை ஆண்டுக்கு ஒரு முறை வடகிழக்கு பருவமழையின் போது மட்டுமே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 73 பிரதான ஏரிகளில் ஏழெட்டு ஏரிகளை மட்டுமே நிரப்பிவிட்டு காணாமல் போகிறது. இந்த ஆற்று நீரால் மாவட்ட மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க முடிவதில்லை.

இதன் காரணமாகத்தான் திருச்சி மாவட்டம் கொள்ளிடம், ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டு, பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மூலம் கிடை க்கப்படும் குடிநீர் போதாத நிலையில், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி ஆகியவை ஏற் கனவே தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீரைக் கொண்டு தான் சமாளித்து வருகின்றன. இதன் காரணமாக புதிதாக கொள்ளி டம் கூட்டுக்குடிநீர்த் திட்டம் பெரம்பலூர் நகராட்சிக்கும் எறையூர் காலணி பூங்கா, பாடாலூர் ஜவுளிப் பூங்கா ஆகியவற்றிற்கும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இருந்தும் பெரும்பாலான கிராமப்புறங்களில் வரக்கூடிய மே, ஜூன் மாதங்க ளில் சமாளிக்கக் கூடிய அளவிற்கு தேவையான குடிநீரோ அல்லது வீடுகளில் புழங்குவதற்குத் தேவையான தண்ணீரோ இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படும் நிலைதான் உள்ளது. ஏற்கனவே ஊராட்சிக் கிணறுகளின் நீர்மட்டம் குறைந் ததால் போதுமான தண்ணீரை வழங்க முடியாத நிலையில், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையே உள்ளது. ஏற்கனவே ஹோட்டல்களுக்கும் கட்டுமான பணிகளுக்கும் டேங்கர் லாரிகளில் ஏற்றி வந்து விற்கப்படும் தண்ணீர் பயன்பாடற்ற குடிநீர் கிணறுகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத, சுகாதாரமற்ற தண்ணீரைத் தான் கொண்டு வந்து வழங்குகிறார்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகள் ஆய்வு செய்வதே இல்லை. இதனால் டேங்கர் லாரிகளில் ஏற்றி வரப்படும் பயன்படுத்தப்படாத கிணறுகளின் தண்ணீரால் எப்போதும் பேராபத்து தான் காத்திருக்கிறது. எனவே ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டு ப்பாட்டை சமாளிக்க கல் குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர் வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். பெரம்ப லூர் மாவட்டத்தில் கவுல் பாளையம், செங்குணம், பாடாலூர், நாரணமங்கலம், மருதடி, மேட்டுப்பாளையம், முருகன்குடி, வயலப்பாடி போன்ற இடங்களில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கல் குவாரிகளில் தண்ணீர் வற்றாமல் தேங்கிக் கிடக்கிறது.

இந்த தண்ணீரை சுகாதாரத் துறையினர் மூலம் ஆய்வு செய்து,டேங்கர் லாரிகளில் ஏற்றி ஒவ்வொரு டேங்கர் லாரிக்கும் குளோரினேசன் செய்யக்கூடிய சுத்திகரிக்கும் மாத்திரைகளைப் போட்டு ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கலாம். இதற்காக டேங்கர் லாரிகளின் வாட கைச் செலவுகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் போது மானது. இதன்மூலம் வரக் கூடிய 60 நாட்களில் தண் ணீர்த் தட்டுப்பாட்டினை சமாளிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.இதே முயற்சியை கலெக்டர் தரேஷ் அகமது பெரம்பலூர் மாவட்டத்தில் பதவியில் இருக்கும் பொழுது, முருக்கன்குடி கல் குவாரியிலிருந்து தண்ணீரை பாக்டீரியா டெஸ்ட் மூலம் சுகாதாரத் துறையினரை கொண்டு பரிசோதனை செய்து, பயன்படுத்த தகுதியானது என உறுதி செய்யப்பட்ட பின்னர் டேங்கர் லாரிகளில் ஏற்றி ஒவ்வொரு டேங்கர் லாரிக்கும் சுத்திகரிக்கக் கூடிய ஒரு மாத்திரையை போடச் செய்து, டேங்கர் லாரிக்கான வாடகைக்கும் அனுமதி அளித்தார்.இதே முறையை தற்போது கலெக்டர் கற்பகம் பின்பற்றினால் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களின் தண்ணீர்த் தேவையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

The post கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: