நாகை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாட்டை நீக்க புதிதாக குடோன் அமைக்கப்படும்

நாகை,நவ.10: நாகை மாவட்டத்தில் உரங்கள் பற்றாக்குறையை போக்க குடோன்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளது என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் கூறினார். நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகித்து பேசியதாவது: நாகை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நிரந்தர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் குடோன் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதே போல் ரயில் மூலம் வரும் உரத்தை சேமித்து வைக்கவும் குடோன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உரம் தட்டுப்பாடு ஏற்படும் போது நமக்கு தேவையான உரம் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள குடோன்களில் இருந்து பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அந்த மாவட்டத்திலும் உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குடோன்கள் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார். வேளாண்மை இணை இயக்குநர் கல்யாணசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: