புதுக்கோட்டையில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10,355 ஆக உயர்வு

புதுக்கோட்டை, அக். 23: புதுக்கோட்டையில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10,355 ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர் எண்ணிக்கை 10,355 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,910 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு ஏதுமில்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 147 ஆக தொடர்கிறது. இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 298 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 10 மணிக்கு விமானம் மூலம் வந்தார். அவர் விராலிமலை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பகல் 12 மணிக்கு புதுக்கோட்டை நகருக்கு அருகேயுள்ள கவிநாடு கண்மாய் பகுதிக்கு வந்தார். அங்கு, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி அளித்து முதல் கட்டமாக ரூ. 700 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 250 மாட்டு வண்டிகளுடன் வந்திருந்த விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி சிறிதுநேரம் ஓட்டிக் கொண்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Related Stories: