அந்தியூர் அருகே லாரி மோதி மாணவி பரிதாப பலி

அந்தியூர், அக்.23: அத்தாணி அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார். அந்தியூர் அருகே ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கனிஷ்கா (9). அத்தாணியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த லாரி, கனிஷ்கா மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார், நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வகுமார் (30) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>