ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 62 பேர் தேர்ச்சி

ஈரோடு,அக்.18: நாடு முழுவதும் கடந்த கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 222 மாணவ,மாணவிகள் சேலம், கோவை போன்ற மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இந்நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான ரிசல்ட் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 222 பேரில், 28 சதவீதம் பேர் அதாவது 62 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவர் பூபதி என்பவர் 559 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

Related Stories: