திண்டுக்கல்லில் வடமதுரை சிறுமி பாலியல் வழக்கில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் சிபிசிஐடி விசாரிக்கவும் மனு

திண்டுக்கல், அக். 16: திண்டுக்கல்லில் வடமதுரை சிறுமி பாலியல் கொலை வழக்கில் நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் சுதந்திரதேவி, மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, தென் மண்டல செயலாளர் சுகுமாறன், மாநில செயலாளர் பாரதி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வடமதுரை சிறுமி பாலியல் கொலை வழக்கில் நீதி கேட்டும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும், வடமதுரை காவல்துறையை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிபிசிஐடி விசாரிக்க கோரி மனு: தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராஜன் நேற்று கலெக்டர் விஜயலட்சுமி, எஸ்பி ரவளிபிரியாவிடம் மனு அளித்தார். அதில், ‘வடமதுரை சிறுமி பாலியல் கொலை வழக்கை மேல்முறையீடு செய்ய அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, முதலில் இருந்து அனைத்து சாட்சிகளையும் விசாரிக்க வேண்டும். சிறுமி குடும்பத்திற்கு இழப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்குவதுடன், அவரது தாய்க்கு சத்துணவு பணியாளர் பணி வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: