கோவை அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவு வெளியீடு

கோவை, அக். 16: கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலையில் 24 பாடப்பிரிவுகளும், முதுகலையில் 21 பாடப்பிரிவுகளும் உள்ளது. நடப்பாண்டில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பருவ தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதன்படி, இளங்கலையில் 2ம் பருவம், 4ம் பருவம் மற்றும் 6ம் பருவத்திற்கான தேர்வு முடிவுகளும், முதுகலையில் இரண்டாவது மற்றும் நான்காவது பருவத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பருவத்தேர்வுக்கான முடிவுகளை மாணவர்கள் கல்லூரியின் www.gacbe.ac.in என்ற இணைதயள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: