5,500 பேர் பரிசோதனை காத்திருப்பு

கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நோய்த்தொற்று பல்வேறு காலகட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. போதிய விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் மக்கள் இதனை முறையாக பின்பற்றாமல் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி கூறுகையில், மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. விழிப்புணர்வு

ஏற்படுத்திய போதிலும் அதனை முறையாக மக்கள் பின்பற்றாமல் உள்ளனர். மக்களிடம் அலட்சியம் கூடாது. இது வரையில் அபராதம் என்ற வகையில் ரூ. 11 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வேகமாக நோய்த் தோற்று பரவிவரும் நிலையில் மக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதற்கிடையே இதுவரையில் இல்லாத அளவிற்கு கடலூர் மாவட்டத்தில் 5,511 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பு பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: