10ம் வகுப்பு தனித்தேர்வு 9 மாவட்ட விடைத்தாள் திருத்த நாமக்கல்லில் மையம் அமைப்பு இன்று துவக்கம்

நாமக்கல், செப்.29:தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு, கடந்த 21ம்தேதி துவங்கி 25ம் தேதியுடன் முடிவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் 320 மாணவ, மாணவியர் இந்த தேர்வினை எழுதினர். சமூக இடைவெளியுடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. விடைத்தாள் திருத்த நாமக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 9 மாவட்டங்களை சேர்ந்த 10ம் வகுப்பு தனித்தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. இதற்காக கடந்த 2 தினங்களாக வெளி மாவட்டங்களில் இருந்து விடைத்தாள் நாமக்கல் கொண்டு வரப்பட்டது. இன்று (29ம்தேதி) முதல் விடைத்தாள் திருத்தப்படுகிறது. முதல் நாளான இன்று முதன்மைதேர்வர்கள், கூர்ந்து ஆய்வு அலுவலர்கள் விடைத்தாளை மதிப்பீடு செய்கின்றனர். 30, 1ம்தேதி ஆகிய இரண்டு நாட்கள் உதவி தேர்வர்கள் விடைத்தாளை திருத்துகின்றனர். இந்த பணியில் 400 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விடைத்தாள் முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் கபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: