மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கோவை, ஆக. 22:  திருப்பூர் அருகேயுள்ள நம்மியாம்பாளையத்தில் வசிப்பவர் ராஜ்தன்ராய்(43). இவர் கோவை கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அவர் மில் வளாகத்தில் உள்ள வாட்டர் டேங்க் அருகே மரத்தில் ஏறி அதன் மரக்கிளையை வெட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>