தேனி மாவட்ட வர்த்தக காங். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனி, மார்ச் 19: தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர்கள் சுப்புராஜ், மெல்வின், கணேஷ்மிஸ்ரா, தேனி நகர செயலாளர் தனராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி நடக்க உள்ள காமராஜர் படம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ள கன்னியாகுமரி எம்.பியான வசந்தகுமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், கொரோனா வைரசை கடடுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: