கொரோனா பீதி சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது

பள்ளிபாளையம், மார்ச் 18: கொரோனா பீதி காரணமாக பள்ளிபாளையத்தில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திட தமிழக அரசு உத்தரவையடுத்து பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. ஆவாரங்காட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் மூடப்பட்டது. நகரில் உள்ள அனைத்து தனியார் திருமண மண்டபங்களையும் மூடும்படி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு இதற்கான நோட்டீசுகள் அனுப்பியுள்ளது.

பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் பகுதியில் காலை -மாலை நேரங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஓட்டல், டீக்கடைகள் மற்றும் தின்பண்டங்கள் விற்கப்படும் கடைகளின் வாயிலில் கைகழுவிக்கொள்ள தண்ணீரும், சோப்பும் வைக்க நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. நகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அலுவலர்கள் அனைவருக்கும் சுத்தமாக கை கழுவ பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உணவுக்கு முன்புபாக அனைவரும் சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் இளவரசன், சுகாதார ஆய்வாளர் நகுல்சாமி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: