காரை ஓரமாக நிறுத்த சொன்ன இன்ஸ்பெக்டரை தாக்கிய மூணாறு வாலிபர் கைது

மூணாறு, மார்ச் 13: மூணாறில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்திய சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற இன்ஸ்பெக்டர் மற்றும் 2 பேரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார் .

மூணாறு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அருண் (32). இவர் தனது நண்பர்களான பாலமுருகன், ரவிச்சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் பள்ளிவாசல் பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். காரை அருண் ஓட்டிவந்தார். அப்போது பின்னால் வந்த லாரிக்கு வழி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் லாரி ஓட்டுனருக்கும் அருணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாலையின் நடுவில் அருண் வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மூணாறு இன்ஸ்பெக்டர் சஜீவ் மற்றும் ஷினு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்ஸ்பெக்டர் சஜீவ் சாலையில் இருந்து காரை ஓரமாக நிறுத்த வேண்டும் என்று அருணிடம் கூறினார். உடடே அருண், அவரது நண்பர்கள் பாலமுருகன்(30), ரவிச்சந்திரன்(31), சுரேஷ்(30) ஆகியோர் சேர்ந்து போலீசாரை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளி அருணை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: