தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி வழங்கல்

அரியலூர், மார்ச் 13: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியலிருந்து 9 நபர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு நிதியுதவிக்கான காசோலைகளை கலெக்டர் ரத்னா வழங்கினார். அதில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாற்றுத்திறானி சிவகாமி என்பவருக்கு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வில் பங்கேற்க பயண செலவுக்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, பெட்டிக்கடை வைப்பதற்காக நாகமங்கலத்தை சேர்ந்த முருகானந்தத்துக்கு ரூ.15 ஆயிரம் காசோலை, நாயகனைப்பிரியாளை சேர்ந்த அற்புதசெல்விக்கு ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கினார்.

மேலும் கோடாலிக்கருப்பூரை சேர்ந்த சம்பத்துக்கு ரூ.7,600க்கான மூன்று சக்கர மிதிவண்டி, கீழப்பழூரை சேர்ந்த கலையரசன், பூவந்திக்கொல்லையை சேர்ந்த ரூபன், குருவாலப்பர்கோவிலை சேர்ந்த வீரசக்தி ஆகியோருக்கு மருத்துவ மேல்சிகிச்சைக்காக ரூ.60,000க்கான காசோலை, குமிழியத்தை சேர்ந்த அன்புதமிழுக்குகு ரூ.5,600 மதிப்பில் தையல் இயந்திரத்தை கலெக்டர் ரத்னா வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்பி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

Related Stories: