நாசரேத் பொறியியல் கல்லூரியில் கணினி விழிப்புணர்வு கருத்தரங்கு

நாசரேத், மார்ச் 13: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் ‘கணினியியல் பன்னாட்டு ஐசிசிடி 20’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.    கல்லூரித் தாளாளர் சசிகரன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கணினித்துறைத் தலைவர் நிஷா ரோஸ்பெல் வரவேற்றார். வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி கணினித் துறைத் தலைவர் பாபுரெங்கராஜன், திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரி பேராசிரியை சஜிலின் லோரட்  தொழில்நுட்பவளர்ச்சி குறித்து பேசினர்.இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர். நடுவர்களாக அறிவியல்  மற்றும் மனிதநேய துறைத்தலைவர்ஆக்னஸ் பிரேமா மேரி, மின்னணு மற்றும் தகவல் தொடர்புதுறைத் தலைவர் ஜெனிபர் ஜான், இயந்திரவியல் துறைத் தலைவர் எபனேசர் டேனியல், தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஜெய்சன்  செயல்பட்டனர். ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் சசிகரன் தலைமையில் முதல்வர் ஜெயக்குமார், துறைத் தலைவர் நிஷா ரோஸ்பெல், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்கள் ரெஜினாஎலிசபெத், மேரிஏஞ்சலின் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், செய்திருந்தனர்.

Related Stories: